Posts filed under ‘இனிப்பு வகைகள்’

பூந்தி லட்டு

Originally posted on சொல்லுகிறேன்:
வேண்டியவைகள் புதியதாக அரைத்த கடலை மாவு—2கப் சர்க்கரை—இரண்டரைகப் நெய்—–1டேபிள்ஸ்பூன் முந்திரிப் பருப்பு—–10  விருப்பம் போல் லவங்கம்—–6 திராட்சை—–15 ஏலக்காய்—–6   பொடித்துக் கொள்ளவும் பூந்தி பொரிக்க —–வேண்டிய  எண்ணெய் கேஸரி பவுடர்—-ஒரு துளி குங்குமப்பூ—சில இதழ்கள் பச்சைக் கற்பூரம் —-மிகச் சிறிய அளவு செய்முறை சர்க்கரையை   அமிழ    ஒருகப் ஜலம் சேர்த்து  அகன்ற பாத்திரத்தில்    நிதானமான தீயில்  வைக்கவும். பாகு கொதிக்கும் போது ஒரு ஸ்பூன்  பாலைச் சேர்த்தால் அழுக்கு ஓரமாக ஒதுங்கும். கரண்டியால்…

Continue Reading நவம்பர் 6, 2015 at 7:56 முப 13 பின்னூட்டங்கள்

குதிரைவாலி அரிசியில் குழி அப்பம்.

குதிரைவாலி அரிசியின்  உப்பு,வெல்ல அப்பங்கள்

குதிரைவாலி அரிசியின் உப்பு,வெல்ல அப்பங்கள்.

விண்டுப் பார்த்து  சுளைசுளையாக இருக்கா? ஸரியான பதந்தான். அதுவும் கூட இருக்கிறது.

எல்லா இடத்திலும்  இப்போது  சிறுதானியங்களின் உபயோகம் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. எல்லாவகை  சிறுதானியங்களும்,மேலும் அதிக ஸாமான்களை/யும்க கொண்டு கஞ்சி மாவு தயாரிப்பது என்பது யாவர் வீட்டிலும்,பிரபலமாகிக்கொண்டு வருகிறது.  அளவுகளில்  சற்றேறக்குறைய வித்தியாஸங்கள் இருந்தாலும்   மிகவும் எளிமையாக யாவரும் தயாரித்துச் சாப்பிடுகிறார்கள்.    எங்கள் பெண்ணின்  வீட்டிலும் இது மிகவும் பிரபலம்.   வயதானவர்கள், அதிகம் பொருப்புகளை வகிக்கும் நடுத்தர வயதினர்  என யாவருக்கும் நல்ல,ஸத்தையும்,ஆரோக்யத்தையும் அளிக்கிறது.

கரண்டியால் அளந்து தானியங்கள் போடுவதில்லை. கடையிலிருந்து  பாக்கெட்.பாக்கெட்டாக  வாங்கிவந்து  வறுத்து அரைப்பதுதான். அவியலின் காய்கள் போல , இதில் இல்லாத தானியங்களே கிடையாது. பார்க்காத சிறுதானியங்களைக்கூட  ,சென்னையில் கிடைப்பதை வாங்கி வந்ததைப் பார்த்த போதுதான் எனக்கும் சில தானியங்கள் எப்படியிருக்கும் என்று தெரிந்தது.  சொன்னால் இவ்வளவா என்று மலைத்துப் போகும் அளவிற்கு தானியங்கள். நானும் அந்த ஸத்து மாவின்   சக்தியை  அரிந்துகொண்டு சாப்பிட்டு வருகிறேன்.. மாவு போஸ்டில் வந்து விடுகிரது.  அந்தப்பெயர்களின் பட்டியலைப் பாருங்கள். பல படங்களையும் பாருங்கள்.

தானியங்களில்ச் சில

தானியங்களில்ச் சில.படம்    1

தினை, சாமை   மேல்வரிசை,    கீழ் வரிசை வரகரிசி, கொள்ளு அடுத்து

இன்னும் சில

இன்னும் சில  படம்   2மேல்வரிசை–கேழ்வரகு,   கம்பு அடுத்து   ஜெவ்வரிசி, சம்பா கோதுமை,நடுவில்  பார்லி, இன்னும் படத்தில் இல்லாதவைகள்  மக்காச் சோளம்,பொட்டுக்கடலை,புழுங்கலரிசி,பாதாம், குதிரைவாலி அரிசி, ஏலக்காய், போதுமா ஸாமான்.?

நல்ல சுத்தமாகக்  கிடைக்கும் ஸாமான்களை வாங்கி அப்படியே   சற்று வாஸனை வருமளவிற்கு வறுத்து, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் கஞ்சிமாவு ரெடி.

இரண்டு மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு எடுத்து,  இரண்டுகப்   நல்ல தண்ணீரில் கரைத்து, மேலும் தண்ணீருடன்அடுப்பில் வைத்துக்  கிளறினால்  வேண்டிய அளவிற்குத் திக்காகவோ,நீர்க்கவோ கஞ்சி காய்ச்ச முடியும்,பால்,சர்க்கரை,தேன் எது வேண்டுமோ  அதைச் சேர்த்துப் பருகவேண்டியதுதான்.

இரண்டுடேபிள்ஸ்பூன்மாவில் தயாரான கஞ்சி

இரண்டுடேபிள்ஸ்பூன்மாவில் தயாரான கஞ்சி

கஞ்சி கொதிக்க ஆரம்பித்தபின்தீயைமட்டுப்படுத்தி ஐந்து நிமிஷம் கிளறினால்ப் போதும்.  நல்ல ஸத்துள்ள கஞ்சி. வாஸனைக்கு ஏலக்காயும், சக்திக்குத் தகுந்தாற்போல பாதாமும் போடலாம். கேழ்வரகு  மெயினாக ஒரு கிலோ அளவிற்கு    எடுத்துக் கொண்டு மற்றவைகளை  குறைத்துப் போடலாம்.

ஸரியான அளவு பின்னால் எழுதுகிறேன். குதிரைவாலி அப்பம் தலைப்பு  அதைப் பார்க்கலாம்.

சென்னையிலிருந்து வரும்போதே அரைகிலோ குதிரைவாலி அரிசியும் ஃப்லைட்டில்  கூட வந்து விட்டது.வேளை வந்தது இப்போதுதான்.   கிச்சடியும்,பச்சடியும் செய்தேன்..ஒருகப் அரிசியில்   கறிகாய்கள் சேர்த்து கிச்சடி,கூடவே தயிர்ப் பச்சடி. நல்ல டேஸ்ட்தான்.  அட திரும்பவும்  எங்கோ போகிறது குதிரைவாலி.. அப்பம்தான் நான் சொல்ல வந்தது. வாங்க அப்பம் செய்யலாம் அப்பம்,குதிக்க, குழக்கட்டை கூத்தாட என்று வசனம் உண்டு.  மோமோவாகக் கொழுக்கட்டை ஆயிற்று.  இப்போது எண்ணெயில் அப்பத்தைக்     குதிக்க விடுவோம். வேண்டியவைகள்  நான் செய்த வகையில்

குதிரைவாலி அரிசி–ஒருகப்

உளுத்தம் பருப்பு—கால்கப்,எண்ணி பத்து வெந்தயம்.

தேங்காய்த் துருவல்—-2 டேபிள்ஸ்பூன்.

அப்பம் வேக வைக்க வேண்டிய  தேவையான எண்ணெய்.

உப்பு அப்பத்திற்கு பச்சைமிளகாய்–1 ,  சீரகம்துளி,பெருங்காயம்  ஒரு துளி,உப்பு,கொத்தமல்லி இலை சிறிது.

செய்முறை—கு. வாலி அரிசி,பருப்பு,வெந்தயம்  மூன்றையும்  நன்றாக ஊறவைத்து மிக்ஸியில்,தேங்காயுடன் சேர்த்து நன்றாக கெட்டியாக அரைக்கவும்.,தோசைமாவு பதத்தில் இருக்கலாம்.

அப்பத்துக்கரைத்தமாவு

அப்பத்துக்கரைத்தமாவு

இரண்டு  டேபிள்ஸ்பூன்  மைதாவும்  சேர்த்துக் கரைக்கவும்.

பாதி மாவைத் தனியாக எடுத்து அதில் துளி உப்பு,பொடியாகநறுக்கிய மிளகாய்,சீரகம்,பெருங்காயம்,கொத்தமல்லி இலை சேர்த்துக் கலக்கவும்.  மிகுதி பாதி மாவில் வெல்லமோ,நாட்டுச் சக்கரையோ, சர்க்கரையோ நான்குஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கரைக்கவும். ஏலப்பொடி துளி போடவும்.

உப்புக்கார அப்பம் வேகிறது

உப்புக்கார அப்பம் வேகிறது

அப்பக்காரல் தேடினால் எனக்குக் கிடைக்கவில்லை. சின்ன வாணலியிலேயே எண்ணெயைக் காய வைத்து சின்னக்கரண்டியால்  ஒவ்வொன்றாக  அப்பத்தை வார்த்து,வேக வைத்துத் திருப்பி எடுத்தேன்.  மொத்தமே படத்தில் இருக்கும் அளவுதான். வென்தயம் போட்டால்  அப்பம் சுளைசுளையாக வரும்.  வீட்டில் யாரும் இல்லை. முதல்தரம்  இந்த அரிசி அப்பம் செய்தேன்..  சக்கரைதான் கிடைத்தது. அதான் கலர் குறைவு.

இனிப்பு அப்பம்

இனிப்பு அப்பம்

வெல்ல அப்பத்தில்  பெருஞ்சீரகம் கூட போடுபவர்களும் உண்டு,  இதுவும் ஒரு டிப்ஸ்தான்.  முதலில் செய்தது கிச்சடிதான். அதையும் அப்புறம் போட்டு விடுகிறேன். எப்படி இருக்கு?  காமா,சோமா இல்லை நன்றாக இருந்ததென்று சொன்னார்கள். பார்ப்போம்,

அப்பங்கள்

அப்பங்கள்

அப்பம் வார்க்கும்   அப்பக்காரலில் செய்தால்  ஒரே அளவாகக்  குண்டு குண்டாக வரும்..

ஜூலை 8, 2015 at 9:18 முப 16 பின்னூட்டங்கள்

காரடை. உப்பு

Originally posted on சொல்லுகிறேன்:
பச்சரிசி–1கப் தேங்காய்த் துருவல்—அரைகப் பச்சைமிளகாய்—2 இஞ்சி—சிறியதாக  நறுக்கியது—2டீஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு—வகைக்கு சிறிதளவு ஊறிய   காராமணி—-2டேபிள்ஸ்பூன் பெருங்காயம்—வாஸனைக்கு கறிவேப்பிலை,  கொத்தமல்லி   சிறிதளவு. தாளித்துக் கொட்ட—எண்ணெய்  சிறிதளவு செய்முறை—-அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சிறிது நேரம் ஊறவைத்து  வடிக்கட்டி நிழல்  உலர்த்தலாக ஒரு  துணியின் மீது உலர்த்தவும். கலகலஎன்று  உலர்ந்த  அரிசியை  நிதானதீயில்   வாணலியை வைத்து சற்று  சிவக்கும் வரை  வறுத்தெடுக்கவும். ஆறியபின்   வறுத்த       அரிசியை   ரவையாக    மிக்ஸியில் பொடிக்கவும். காராமணியை  …

Continue Reading மார்ச் 11, 2014 at 12:12 பிப 1 மறுமொழி

காரடை—வெல்லம்.

Originally posted on சொல்லுகிறேன்:
வேண்டியவைகள் பச்சரிசி——-ஒருகப்– பொடித்த  வெல்லம்——முக்கால் கப் ஏலக்காய்—3 தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும். காராமணி——2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துண்டுகளாக நறுக்கியது—–3 டேபிள் ஸ்பூன் நெய்——–3டீஸ்பூன் செய்முறை அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாகக் காய வைக்கவும். கலகல என்று உலர்ந்த அரிசியை வாணலியிலிட்டு சற்று சிவப்பாகும் வரை  வறுத்து எடுக்கவும்.  ஆறிய பின் அரிசியை  மிக்ஸியில் இட்டு   மெல்லிய ரவையாகப் பொடித்துக் கொள்ளவும். காரா மணியை முன்னதாகவே வெறும் வாணலியில்…

Continue Reading மார்ச் 11, 2014 at 12:03 பிப 3 பின்னூட்டங்கள்

சக்கரைப் பொங்கல்

Originally posted on சொல்லுகிறேன்:
சக்கரைப்பொங்கல் பொங்கல்ப் பண்டிகை  அடுத்து வருவதால்  பொங்கல் செய்யும் முறையையும் பார்ப்போமா. வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப்.   பாஸ்மதி பயத்தம் பருப்பு—அரிசியின் அளவில் மூன்றிலொருபங்கு பாகுவெல்லம்—பொடித்தது—2 கப் நல்ல நெய்—2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்–5   பொடித்துக் கொள்ளவும் முந்திரி,   திராட்சை–விருப்பத்திற்கு குங்குமப்பூ–சில இதழ்கள் ஜாதிக்காய்ப் பொடி—ஒரு சிட்டிகை   வாஸனைக்கு தேன்—2 ஸ்பூன்   ருசிக்கு பால்—-அரைகப் செய்முறை——.வாணலியைச் சூடாக்கி  அரிசி, பருப்பை தனித்தனியே வாஸனை வரும்படி சற்றுச்   சிவக்க வறுத்துக் கொள்ளவும். அரிசி, பருப்பை, இரண்டு  மூன்று முறை…

Continue Reading ஜனவரி 9, 2014 at 12:59 பிப 14 பின்னூட்டங்கள்

திருவாதிரைக் களி.

மூன்று வருஷத்திற்கு முன்பு எழுதியது. படம் பிரகு போடுகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்

என்னுடைய சொல்லுகிறேனில் எழுதியது.  பார்த்தேன். பிரசுரித்தேன் வாழ்த்துகள்.

சொல்லுகிறேன்

திருவாதிரை    ஒருவாக் களிதின்னாதவா நரகக்குழி

இப்படி ஒரு வசனம் சொல்வார்கள் பழைய காலத்தில்.

நாம் களியை செய்து பார்த்து விடலாம்.

வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப்

துவரம் பருப்பு—2டேபிள்ஸ்பூன்

பயத்தம் பருப்பு—2 டேபிள் ஸ்பூன்

வெல்லப்பொடி—-ஒன்றறைக் கப்

நெய்—2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த் துறுவல்—அரைகப்

முந்திரி  திராட்சை—-விருப்பம்போல்

ஏலப்பொடி—-சிறிது

இருந்தால்—ஒருஸ்பூன்  தேன்

செய்முறை.——அரிசியைக் களைந்து உலர்த்தி சிவக்க வறுத்து

மிக்ஸியில்  ரவை போல்  பொடித்துக் கொள்ளவும்.

பருப்புக்களையும் வறுத்து  ரவைபதத்தில் பொடிக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில்   இரண்டரைகப்  ஜலத்தைநன்றாகக்

கொதிக்க  விடவும். சிறிது நெய் சேர்க்கவும்.

தீயை நிதானப்படுத்தி     கொதிக்கும் ஜலத்தில் உடைத்த ரவை,பருப்புக் கலவையைக்

கொட்டிக் கிளறவும். ஒரு துளி உப்பு சேர்க்கலாம்.

உப்புமா வேக வைப்பதுபோல் தட்டினால் மூடி நன்றாக  வேக

வைக்கவும்.

வெல்லத்தை அமிழ ஜலம் விட்டுக் கரைத்து ஒரு கொதிவிட்டு

வடிக்கட்டி அதைப் பாகாகக் காய்ச்சவும்.

காய்ச்சிய  பாகை வெந்த அரிசி ரவைக் கலவையில் கொட்டி

கலவை கெட்டியாகச் சேரும்வரைக் கிளறவும்.

நெய்யில்,   முந்திரி, திராட்சையை வறுத்து, தேங்காயைச்

சேர்த்துப் பிரட்டி கலவையில் சேர்க்கவும்.

ஏலப்பொடி, தேன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

களி ரெடி.    பருப்பு உடைத்து சேர்ப்பதற்கு பதில்

முக்கால் பதம் வேக வைத்த பருப்பைக் கொஞ்சம்

பிழிந்தும்  சேர்க்கலாம்.     நான் தற்போது டில்லி

வந்திருப்பதால்  படம் எடுத்துப் போட சௌகரியப்

படவில்லை.

   கொதிக்கும் ஜலத்திலே யே  வெல்லத்தைப் போட்டு

கொதிக்கவிட்டு, ரவைக் கலவையைச் சேர்த்து,வேகவைத்துச்

செய்வதும் உண்டு.

View original post 12 more words

திசெம்பர் 16, 2013 at 6:22 முப 10 பின்னூட்டங்கள்

கல்கண்டுப் பொங்கல்.

நவராத்திரி  விசேஶ நிவேதனப்  பொருள்  கல்கண்டுப் பொங்கலுடன் நான் வந்திருக்கிறேன்.

விசேஶமாக அதிகம் ஸாமான்களில்லாமல் இருப்பதைக் கொண்டு செய்ததிது.

வழக்கமான சில குறிப்புகள் எழுதி வெகு நாட்களாகி விட்டது.

அடிக்கடி செய்யும் பொங்லில்லை இது.

ஆதலால் செய்தபோது பதிவிடவேண்டும் என்று விருப்பம்.

வேண்டியவைகள்

சீரகச்சம்பா அரிசி—கால்கப்.

டைமண்ட் கல்கண்டு—முக்கால்கப்

அரிசியும் கல்க்கண்டும்

அரிசியும் கல்க்கண்டும்

பால்—ஒருகப்

ஏலக்காய்—இரண்டு

பாதாம்,முந்திரி,திராக்ஷை, எது கைவசமோ அதில் சிறிது.

செய்முறை

அடிகனமான பாத்திரம், எடுத்துக் கொள்ளவும்.

பாலுடன் ஸரி அளவு தண்ணீரும் கலந்து கொள்ளவும்.

அரிசியைக் களைந்து பாதி அளவு பால்க் கலவையுடன் தீயைஸிம்மில் வைத்து

அரிசியை வேக வைக்கவு்ம்.

அரிசி வேக வேக மீதிக் கலவையை சேர்த்துக் கொண்டே வரவும்.

நன்றாக வெந்தவுடன் கரண்டியால் நன்றாக மசிக்கவும்.

பாலில் வெந்தஅரிசி

பாலில் வெந்தஅரிசி

கல்க்கண்டுப் பாகுடன் கலவை
கல்க்கண்டுப் பாகுடன் கலவை

நான் இரண்டு டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காயையும் சேர்த்தேன்.

ஏலக்காய் பொடித்து சேர்த்து நன்றாகக் கிளறவும். சற்று நீர்க்க ஆகிப் பிறகு

இறுகிவரும். எல்லாமே நிதான தீயில்தான்.

இறக்கிவைத்து நெய்யில் முந்திரி,பாதாம்,திராக்ஷை எது இருக்கிறதோ அதை வறுத்துப்

போடவும். குங்குமப்பூ போட்டால் அதிக வாஸனையுடன் கலரும் அழகாக வரும்.

கல்க்கண்டுப் பொங்கல்

கல்க்கண்டுப் பொங்கல்

நவராத்திரி. அம்மனுக்கு நிவேதனம் செய்யவும்.ஒருஸ்பூன் சாப்பிட்டாலும், ருசியாக

இருக்கும். நிவேதனப் பொங்கல் அல்லவா?

நல்ல நெய் முந்திரி வறுக்கப் போதுமானதிருந்தால்ப் போதும்.

சுலபமாகத்தானிருக்கு. என்ன கல்கண்டுதான் வாங்க வேண்டும்.

சின்ன அளவில்ச் செய்தது.  ருசித்து மகிழுங்கள்.

ஒக்ரோபர் 8, 2013 at 8:04 முப 16 பின்னூட்டங்கள்

அதிரஸம்.

அரிசிமாவும் வெல்லமும் சேர்த்துச் செய்யும் தின்பண்டம். அதிரஸம் இதன் அர்த்தம் மிக இனிப்பானது.

Continue Reading ஒக்ரோபர் 2, 2012 at 2:52 பிப 29 பின்னூட்டங்கள்

ஸொஜ்ஜி அப்பம்.

பாருங்கள். சுலபமானது . பூரணம் வைத்த பூரிதான்.

Continue Reading செப்ரெம்பர் 21, 2012 at 1:18 பிப 13 பின்னூட்டங்கள்

மாலாடு

எளிய ஸாமான்கள். ஸுலபமான முறை. சிறிது அக்கறை
காட்டினால் இனிப்பான லாடு தயார்.

Continue Reading ஓகஸ்ட் 23, 2012 at 2:42 பிப 19 பின்னூட்டங்கள்

Older Posts


மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 551,520 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.